ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு

ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி   உயிரிழப்பு
X

 

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி பலி

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி பலியானார் .

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் இன்று பரவலாக மழை பெய்தது. அப்போது திணைக்காத்தான் வயல் அருகே சீந்திவயல் பேருந்து நிறுத்தம் பகுதியில் வழிமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மகன் மகாலிங்கம் என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சென்ற திருவாடானை போலீசார் சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருவாடனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!