டீசல் விலை உயர்வை கண்டித்து படகுகளில் கருப்புக் கொடிகட்டி ஆர்ப்பாட்டம்

டீசல் விலை உயர்வை கண்டித்து படகுகளில் கருப்புக் கொடிகட்டி ஆர்ப்பாட்டம்
X
டீசல் விலை உயர்வை கண்டித்து தொண்டி அருகே மீனவர்கள் படகுகளில் கருப்புக் கொடி கட்டியும் கையில் ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சோழியகுடி கிராமத்தில், டீசல் விலை உயர்வைக் கண்டித்து M.V.பட்டிணம் தலைவர் ராஜமாணிக்கம், சிங்காரவேலன் நகர் பதினெட்டாம்படியான் மற்றும் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் ஆண்கள், பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கையில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சுமார் 400க்கும் மேற்பட்ட படகுகளில் கருப்புக்கொடி கட்டியுள்ளனர்.

மாநில அரசுகள் விற்பனை வரி நீக்கியது போல, மீனவர்களின் படகுகளுக்கு டீசலுக்கு ரூபாய் 18யும் நீக்க வேண்டும், கொரோனாவிற்குப் பிறகு ஏற்றுமதியாகும் கடல் உணவு பொருட்களை முன்புபோல வெளிநாட்டு சந்தையில் டீசல் விலை ஏற்றத்திற்கு தகுந்தாற்போல விற்பனையாக்கி தரவேண்டும். மீன்பிடி தடை காலத்தில் விசைப்படகு மீனவர்கள் பயன்படுத்தும் வலை, கயிறு, நூல் ஆகிய பொருள்களுக்கு மீன் துறை மூலம் கணக்கெடுத்து அதற்கேற்றார்போல் மானியம் வழங்கி மீனவர்கள் வாழ்வாதாரம் பெருக உதவ வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

ராமநாதபுரத்தில் தலைமை சங்கங்கள் நடத்தும் கூட்டத்தின் சார்பாக புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும்போது அடுத்த நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என கூறினர்

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil