இராமேஸ்வரம் மீனவர்களை கற்களை கொண்டு விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியம்

இராமேஸ்வரம் மீனவர்களை கற்களை கொண்டு விரட்டியடித்து   இலங்கை கடற்படை அட்டூழியம்
X
இலங்கை கடற்படையினர், ரோந்து கப்பல்களை கொண்டு இராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகள் மீது மோத முற்பட்டதால் பதற்றம் அடைந்த மீனவர்கள், நாலாபுறமும் சிதறி ஓடியதாக அப்பகுதியில் மீன் பிடித்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்
நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்களை கம்பு மற்றும் கற்களை கொண்டு இலங்கை கடற்படை.யினர் விரட்டியடித்துள்ளனர்.

இராமேஸ்வரத்திலிருந்து நேற்று சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மீனவர்கள், தனுஷ்கோடிக்கும்-கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், பெரிய ரோந்து கப்பல்களை கொண்டு இராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடி விசைப்படகுகள் மீது மோத முற்பட்டுள்ளனர். இதனால் பதற்றம் அடைந்த மீனவர்கள், நாலாபுறமும் சிதறி ஓடியதாக அப்பகுதியில் மீன் பிடித்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் உள்ள மீன்பிடி வலைகளை சேதப்படுத்திய இலங்கை கடற்படையினர், கற்கள் மற்றும் கம்புகளை காட்டி மிரட்டி அனுப்பியுள்ளனர். இதனால் படகு ஒன்றுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் பிரச்னையால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல், மாற்று தொழில் தேடி வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளததாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!