தொண்டி அருகே கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து உயிரிழப்பு

தொண்டி அருகே கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர் படகு கவிழ்ந்து உயிரிழப்பு
X
தொண்டி அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர், படகு கவிழ்ந்து உயிரிழந்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள நம்புதாளை மீனவர் காலனியைச் சேர்ந்த சுப்பையா மகன் ஆறுமுகம், மற்றும் லோகமுத்து மகன் காளி ஆகியோர் இன்று மாலை நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது பலத்த காற்று வீசியதில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் ஆறுமுகம், காளி இருவரும் கடலில் மூழ்கி தத்தளித்தனர். இதனை கண்ட சக மீனவர்கள் உடனடியாக சென்று இருவரையும் மீட்டு தொண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மீனவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், ஆறுமுகம் ஏற்கனவே உயிரிழந்ததாகவும், தெரிவித்தனர். உயிருக்குப் போராடிய நிலையில் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக தொண்டி மெரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!