இராமநாதபுரம் அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர் தவறி விழுந்து பலி

இராமநாதபுரம் அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர் தவறி விழுந்து பலி
X
இராமநாதபுரம் அருகே, மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர், படகில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
இராமநாதபுரம் அருகே திருப்பாலைக்குடியில் இருந்து, நாட்டுப் படகில் கார்த்திகேயன், மற்றும் அவரது மகன் வசந்தகுமார் இருவரும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். கடலில், ஐந்து நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, நிலை தடுமாறி வசந்தகுமார் நாட்டுப்படகில் இருந்து கடலில் தவறி விழுந்துள்ளார்.
அவரை காப்பாற்றும் முயற்சியில் தந்தை கார்த்திகேயன் ஈடுபட்டார். அருகில் உள்ளவர்களும் மீட்புப்பணியில் ஈடுபட்டு, வசந்தகுமாரை மீட்டு, திருப்பாலைக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வசந்தகுமாரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்தும் உடற்கூறு ஆய்விற்காக வசந்தகுமார் உடல் இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து, தேவிபட்டினம் மெரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்