திருவாடானை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து 2 மாடுகள் பலி

திருவாடானை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து  2 மாடுகள் பலி
X
திருவாடானை அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் இரண்டு மாடுகள் பலியாகின.


திருவாடானை அருகே மின்கம்பி அறுந்து விழுந்ததில் இரண்டு மாடுகள் பலியாகின.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வயல்வெளியில் செல்லும் மின்கம்பத்தில் மின்கம்பி அறுந்து வயல்வெளியில் உள்ள தண்ணீரில் விழுந்து கிடந்தது. அங்கு வயலில் 2 மேய்ந்துகொண்டிருந்தன. அந்த மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகின.

இறந்துபோன மாடுகள் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த குஞ்சி என்பவரது மகன் பாக்கியம் (55) மற்றும் ஜோசப் மகன் மைனர் (50) ஆகியோருக்கு சொந்தமானவையாகவும். இதனையடுத்து திருவாடனை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்வதற்கு ஏற்பாடுகளை செய்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
future ai robot technology