அத்தியூத்து கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

அத்தியூத்து கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
X

அத்தியூத்து கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர்.

இராமநாதபுரம் மாவட்டம் அத்தியூத்து கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) கலந்துகொண்டார்.

காந்தியடிகளின் பிறந்த தினமான இன்று இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், அத்தியூத்து கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) காமாட்சி கணேசன், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உட்பட பலர் பங்கேற்றனர்.

இக்கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சி செலவினம், குடிநீர் சிக்கனம், ஊரகப் பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் டெங்கு வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் செலவின விபரம், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், முழு சுகாதார இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், ஜல் சக்தி அபியான் திட்டம், குழந்தைத் திருமணங்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து கிராம பொதுமக்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கிராம சபைக் கூட்டத்தில், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் கேசவதாசன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, தங்கப்பாண்டி உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story