/* */

இராமநாதபுரத்தில் சதம் அடித்த டீசல் விலை: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

இராமநாதபுரத்தில் டீசல் விலை சதம் அடித்துள்ளது. இன்று 1 லிட்டர் டீசல் ரூ.100.39 பைசாவாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

HIGHLIGHTS

இந்தியா முழுவதும் தினம் தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றது. ச
ர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு வரிகளால் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகின்றது.
தமிழகத்தின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை 105 ரூபாயும், டீசல் 99 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் டீசல் விலை சதம் அடித்துள்ளது. இன்று 1 லிட்டர் டீசல் ரூ.100.39 பைசாவாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் சில மாதங்களுக்கு ஒரு முறை விலை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது தினம் தோறும் பைசா பைசாவாக விலை உயர்த்தி 1 லிட்டர் சதம் அடிக்கும் நிலைக்கு வந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Updated On: 20 Oct 2021 6:24 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?