இராமநாதபுரம் மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப்பணிகள்: கலெக்டர் நேரில் ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா நேரில் ஆய்வு.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அவ்வப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இன்று ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பாரனூர் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மூலம் கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்தும், பசுமைவீடு திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் வீட்டின் கட்டுமான பணிகள் குறித்தும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூட்டுப் பண்னைத் திட்டத்தின் கீழ் உழவர் உற்பத்தியாளார் குழுக்களுக்கு பண்னை இயந்திரங்களையும், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மூலம் நேரடி நெல் விதைப்பு தொகுப்பு செயல் விளக்கத்திற்கான இடுபொருள்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
பின்னர் சனவேலி ஊராட்சியில் உள்ள நியாயவிலை கடையை பார்வையிட்டு அங்கு பொதுமக்களுக்கு பயோமெட்ரிக் முறையில் பொருட்;கள் வழங்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார். கூடலூர் ஊராட்சியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை பார்வையிட்ட ஆட்சியர், புல்லமடை ஊராட்சியில் புதிதாக அமைக்கப்பட்ட பேவர் பிளாக் சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார், ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் முருகவேல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu