டெல்லி பெண் காவலர் படுகாெலை சம்பவம்: இராமநாதபுரத்தில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

டெல்லி பெண் காவலர் படுகாெலை சம்பவம்: இராமநாதபுரத்தில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்
X

இராமநாதபுரத்தில் தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஷபியா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி இராமநாதபுரத்தில் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

இராமநாதபுரத்தில் ஷபியா பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி தமுமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் பாதுகாப்பு படை பெண் காவலர் ஷபியா பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி இராமநாதபுரம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமுமுக மாநில செயலாளர்கள் சாதிக் பாட்சா, சலிமுல்லாஹ்கான், மாநில அமைப்புச் செயலாளர் உசேன் கனி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட ராபியாவிற்கு நீதி கேட்டும், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 4 கயவர்களை கைது செய்து கடும் தண்டனை வழங்க கோரி கண்டன கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இராமநாதபுரம் கிழக்கு, மத்திய, மேற்கு மாவட்டத்தில் இருந்து பெண்கள் உட்பட சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!