வேளாண் சட்டங்கள் வாபஸ் அரசியல் ஆதாயத்திற்காக எடுத்த முடிவு - திருமாவளவன்
இராமநாதபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தாெல்.திருமாவளவன் கலந்து காெண்டு பேசினார்.
வேளாண் சட்டங்கள் வாபஸ் பெற்றது அரசியல் ஆதாயத்திற்காக எடுத்த முடிவு-இராமநாதபுரத்தில் தொல் திருமாவளவன் பேட்டி.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று இராமநாதபுரம் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்: மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களையும் பிரதமர் திரும்பப் பெற்றது. விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி. ஓராண்டு காலம் இரவு பகல் பார்க்காமல் லட்சக்கணக்கான விவசாயிகள் உறுதியாக நின்று போராடியது காரணமாக இந்த மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும். உத்திரபிரதேசம், உத்தராஞ்சல், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு தான் பிரதமர் இந்த முடிவை எடுத்திருக்கிறார், இருந்தாலும் இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்பதால் மகிழ்ச்சி அடைகிறோம், பிரதமர் தான் எடுத்த முடிவு தவறு என்பதை உணர்ந்து இருப்பார் என நினைக்கிறோம்.
மோடி தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காக இந்த முடிவு எடுத்திருந்தாலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக தான் நினைக்கிறோம். வருகிற 23-ஆம் தேதி திரிபுரா மாநிலத்தில் பிஜேபி அரசின் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வருடம் தோறும் வழங்கப்படும் விருதுகள் இந்த ஆண்டு அம்பேத்கர் சுடர் விருது முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், பெரியார் விருது வைகோவுக்கும், காமராஜர் விருது நெல்லை கண்ணனுக்கும் வழங்கப்பட உள்ளது.
எதிர்க்கட்சிகள் வலுவிழந்து விட்டதா என்று கேட்ட கேள்விக்கு, எதிர்க்கட்சிகள் வலுவிழந்து விட்டது என்று கூற முடியாது பாஜகவை எதிர்ப்பதில் எல்லா கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது. அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். பிஜேபியை தனிமைப்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளன என கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu