கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா

கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா
X

ஏமாற்றி திருமணம் செய்து கைவிட்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளம்பெண் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா.

ஏமாற்றி திருமணம் செய்து கைவிட்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இளம்பெண் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா.

இராமநாதபுரம் சட்டக் கல்லூரியில் படித்த மாணவி கோமளா தன்னுடன் படித்த கல்லூரி மாணவர் சதீஷ் குமார் என்பவரை காதலித்து கடந்த 2020 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது மூன்று மாத கைக்குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கோமளாவை கீழ் சாதி என்று சொல்லி சதீஷ்குமார் தன்னுடைய வீட்டில் ஏற்க மறுப்பதாகவும், கூடுதல் வரதட்சணை கேட்டும், கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியும் கொடுமைப்படுத்தி தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டதாக கூறப்படுகின்றது.

அதுமட்டுமின்றி கோமளாவை தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டு வேறு இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டிருப்பதாகவும், சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன்னைப்போல மேலும் 2 பெண்களின் வாழ்க்கையிலும் விளையாடியுள்ள சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோமளா தன்னுடைய தாய் மற்றும் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் விசாரித்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டனர். இளம் பெண் கைக்குழந்தையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!