இராமநாதபுரத்தில் ரூ.1000-ம் தொட்ட ஒரு கிலோ நண்டு: மீனவர்கள் மகிழ்ச்சி

கடல் நண்டு மாதிரி படம்.
ஆயிரத்தை தொட்டது ஒரு கிலோ நண்டு. மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடல் உணவு ஏற்றுமதி மீன் ரகமான, நண்டு கிலோ ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. தமிழக கடலில் பிடிக்கப்படும் எண்ணற்ற மீன் ரகங்களில் இறால், நண்டு, கணவாய் ஆகியன மட்டும் வெளிநாடுகளுக்கு காலம், காலமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த மீன்களின் வரத்தை வைத்தே மீனவர்களின் கூலி நிர்ணயிக்கப்படுகிறது.
இதனால், இவற்றிற்கான விலை, வெளி நாடுகளின் அசைவ பிரியர்களின் தேவைக்கேற்ப அடிக்கடி மாறுபடும். கடந்த பல ஆண்டுகளில், எப்போதும் இல்லாதளவிற்கு இந்தாண்டு நண்டு விலை கிலோ ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளதால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.340 முதல் ரூ.400 வரை இருந்த ஒரு கிலோ நண்டு தற்போது ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அசைவ உணவு ரகங்களான ஆட்டிறைச்சி கிலோ ரூ.800, கோழிக்கறி ரூ.220 என விற்கப்படுகையில், நண்டு கிலோ ரூ.1,000 என்பது வரலாறு காணாத விலை உயர்வு என கூறி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu