கூட்டுறவு சங்கத்தில் ஊழல்? -அலுவலகத்திற்கு சீல்

கூட்டுறவு சங்கத்தில் ஊழல்? -அலுவலகத்திற்கு சீல்
X

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே எட்டுக்குடி கூட்டுறவு சங்கத்தில் பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக எழுந்த புகாரில் அலுவலகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருவாடானை தாலுகா எட்டுகுடி கிராமத்தில் விவசாயிகளுக்கு சிக்கன நாணய கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த கூட்டுறவு சங்கத்தில் ஏற்கனவே தமிழக அரசு கடன் தள்ளுபடி அறிவித்திருந்த நிலையில் அதற்கான சான்று வழங்கப்படாமல் நீடித்து வந்தது. அதனால் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் மாவட்ட இணை இயக்குநர் நடுகாட்டு ராஜா, மேலாண்மை இணை இயக்குநர் ராஜலட்சுமி, வட்ட கிளை அலுவலர் ஆனந்த பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்ய வந்தனர் எட்டுகுடி கூட்டுறவு சங்கத்திற்கு வந்தபொழுது செயலாளர் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

இதனால் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் ஏமாற்றமடைந்தனர். அதேபோல் இருமுறை ஆன நிலையில் மூன்றாவது முறையாக அலுவலகத்தை பூட்டி விட்டுச் சென்றதால் கோபமடைந்த அதிகாரிகள் அலுவலகத்தை பூட்டி சீல் வைத்து சென்றனர். அலுவலகத்திற்குள் ஆவணங்கள் இருக்கின்றதா? இல்லையா? கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்துள்ளதா? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் வருகிற திங்கட்கிழமை மீண்டும் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்