இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு  நிர்ணயம்
X
இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் 1000 மெ.,டன் தேங்காய் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது .

இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் 1000 மெ.டன் தேங்காய் கொப்பரை குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசால் 2021ல் அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தரத்திற்கு ஏற்ப கொப்பரைக்கு ஒரு கிலோவிற்கு ரூ.103.35 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். சேமிப்பு கிடங்கில் குவித்த 3 நாட்களுக்குள் அதற்குரிய தொகை வழங்கப்படும்.

விருப்பமுள்ள தென்னை விவசாயிகள் தங்களது பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம். நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்குஎண் புத்தகம் ஆகிய நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகி பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself