தொடர் கனமழை: திருவாடானை கிராம பகுதிகளில் ஆட்சியர் நேரில் ஆய்வு
பரவலாக மழை பெய்து வருவதையடுத்து திருவாடானை வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு.
பரவலாக மழை பெய்து வருவதையடுத்து திருவாடானை வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் நேரில் ஆய்வு.
இராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய பகுதிகளில் கனமழை பதிவாகியுள்ளது. இதனையடுத்து திருவாடானை வட்டத்துக்கு உட்பட்ட சில கிராமங்களில் நெல் பயிரிடப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் சாலை போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள தரைப் பாலத்திற்கு மேலே மழைநீர் வெள்ளமாக செல்லும் சூழ்நிலை உள்ளது.
அதன்படி வயல்களில் மழைநீர் சூழ்ந்துள்ள கிளியூர், மங்களக்குடி, அஞ்சுக்கோட்டை, கோடானூர் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்காலிகவடிகால் அமைத்து வயலில் தேங்கியுள்ள மழைநீரை அருகே உள்ள கண்மாய் மற்றும் ஊரணிகளில் சேமித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பழங்குளம் ஊராட்சி மாணிக்கம்கோட்டை கிராமம் மற்றும் திருவாடானை அருகே உள்ள கல்லூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள சாலை தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தரைப்பாலத்தின் அருகே எச்சரிக்கை விழிப்புணர்வு பதாகை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் திருவாடனை வட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஓரியூர் கண்மாய் மற்றும் என்.மங்களம் கண்மாய் ஆகிய கண்மாய்களுக்கு நேரடியாகச் சென்று மழைநீர் சேமிப்பு நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu