குப்பையில் வீசி சென்ற பச்சிளம் குழந்தையின் சடலம்: போலீசார் விசாரணை.

குப்பையில் வீசி சென்ற பச்சிளம் குழந்தையின் சடலம்: போலீசார் விசாரணை.
X

பைல் படம்

உச்சிப்புளி அருகே குப்பையில் வீசி சென்ற பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இராமநாதபுரம் அருகே உள்ள முருகானந்தபுரம் பகுதி குப்பையில் பச்சிளம் குழந்தையின் சடலம் கிடப்பதாக உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பிறந்து சில மணி நேரமே ஆன பெண் பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது.

சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை குப்பையில் வீசி சென்றது யார் என்றும்,

தவறான வழியில் பிறந்த குழந்தையாக இருக்கலாமா என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் சிறு குழந்தையை குப்பையில் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதி பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எத்தனையோ தம்பதியினர் குழந்தை இல்லாமல் தவித்து வரும் சூழலில் இதுபோன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai marketing future