மூன்று தலைவர்களின் கட்சி பொறுப்பு,பதவி உயர்வை கொண்டாடிய பாஜகவினர்.

மூன்று  தலைவர்களின் கட்சி  பொறுப்பு,பதவி உயர்வை கொண்டாடிய பாஜகவினர்.
X
இராமநாதபுரத்தில் மூன்று தலைவர்களின் கட்சி பொறுப்பு பதவி உயர்வை கொண்டாடிய பாஜகவினர்.

இராமநாதபுரத்தில் மூன்று தலைவர்களின் கட்சி பொறுப்பு பதவி உயர்வை பாஜகவினர். இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இராமநாதபுரம் நகர் அரண்மனை பகுதியில், நகர் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில், தமிழக முன்னாள் பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பெற்றுக் கொண்டதற்கும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த குப்புராமு அவர்கள், கயிறு வாரிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டதற்கும், மற்றும் பாஜக மாநில துணைத்தலைவராக இருந்த அண்ணாமலை பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில், இராமநாதபுரம் பாஜக இளைஞர் அணியினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில் ஜீ. குமார், ஆனந்த், துணைத்தலைவர் வீரபாகு, வினோத் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!