திருநங்கை ஆட்சியர் அலுவலத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி

திருநங்கை ஆட்சியர் அலுவலத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி
X

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயலும் திருநங்கை

ராமநாதபுரத்தில் திருநங்கை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் சிவன்யா உட்பட 10 திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு இலவச வீடு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் வட்டாட்சியர் அலுவலகத்திலும் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சிவன்யா உள்ளிட்ட 10 திருநங்கைகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்த போது அதை அலட்சியமாக தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் உணவு இடைவேளைக்கு வெளியே கிளம்பும் நேரத்தில் அவருடைய கார் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

மாவட்ட ஆட்சியர் வெளியில் வர தாமதமாகவே கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து மேலே ஊற்றி தற்கொலை செய்துகொள்ள சிவன்யா என்ற திருநங்கை தற்கொலைக்கு முயன்றார். அங்கிருந்த அதிகாரிகள் அவரோடு கட்டிப்புரண்டு பாட்டிலை பறித்து அசம்பாவிதம் நிகழாமல் தடுத்தனர் அதனால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!