ஆர்.எஸ்.மங்கலம் அருகே கனமழையால் வீடு இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு

ஆர்.எஸ்.மங்கலம் அருகே கனமழையால் வீடு இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு
X

ஆர்.எஸ்.மங்கலம் அருகே கனமழையால் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த முதியவர் மறியராஜ்.

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கனமழையால் வீடு இடிந்து விழுந்து முதியவர் உயிரிழப்பு.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே கனமழையால் வீடு இடிந்து விழுந்து முதியவர் பலி.

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா பகவதி மங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட செம்பிலான்குடி கிராமத்தில் தொடர் மழையின் காரணமாக, மண்சுவரில் கட்டப்பட்ட ஓட்டு வீடு முழுவதுமாக இடிந்து விழுந்ததில் மறியராஜ் (82) இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இவரின் வீட்டின் சுவர் முழுதும் நனைந்து இருந்தது.

இந்நிலையில் இன்று பெய்த கனமழையில் வீட்டின் பின்பக்க சுவர் திடீரென இடிந்து வீட்டிற்குள் விழுந்தது. அப்போது வீட்டிற்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த முதியவர் மறியராஜ் மீது விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் தீயனப்புத்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த முதியவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!