மூதாட்டியை பலாத்காரம் செய்த வயதான காமுகனுக்கு 5 ஆண்டு சிறை

மூதாட்டியை பலாத்காரம் செய்த வயதான காமுகனுக்கு 5 ஆண்டு சிறை
X
மூதாட்டியை பலாத்காரம் செய்த வயதான காமுகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து இராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பு.

மூதாட்டியை பலாத்காரம் செய்த வயதான காமுகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து இராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் ஜெட்டி பகுதியை சேர்ந்த 60 வயது மூதாட்டி கை கால் முடியாத நிலையில் வீட்டில் கடந்த 2018-ம் ஆண்டு படுத்திருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த டுளட்டி என்கிற முத்துமாரி பல வந்தமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டு இராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இன்று முத்துமாரி குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. முத்துமாரிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்து இராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா தீர்ப்பளித்தார்.

Tags

Next Story