மணக்குடியில் வாலிபர் மீது காவல் வாகனம் மோதி விபத்து
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா காரங்காடு பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் செங்கோல் டைமன்ட் இவரும் இவரது நண்பர் பிரதீப் என்ற ஆரோக்கியராஜ் என்பவரும் தனது இரு சக்கர மோட்டார் வாகனத்தில் மனக்குடிக்கு வந்துகொண்டிருந்த போது, தொண்டி வழியாக கன்னியாகுமரிக்கு பாதுகாப்பு பணிக்கு செல்லும் காவல் வாகனம் அதிவேகமாக வந்தில் கட்டுப்பாட்டை இழந்ததால் பின்னால் வந்த காரில் இருசக்கர வாகனம் மோதியதில் செங்கோல் டைமன் காலில் பலத்த காயம், தலையில் காயம் ஏற்பட்டது.
காவல் வாகனம் சாலையை விட்டு இறங்கி ஓடையில் சிக்கியது. ஆத்திரமடைந்த செங்கோல் டைமன்ட் உறவினர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் கற்களை அடுக்கி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தொண்டி காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் திருப்பாலைக்குடி காவல் ஆய்வாளர் பாலசிங்கம் மற்றும் போலீஸார் மறியலில் ஈடுபட்ட செங்கோல் டைமன்ட் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தை சரிவராத நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ஆனந்த்தின் தகப்பனார் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் தொடரும் எனவும் கூறி சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னரே போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதனால் இப்பகுதியில் பல மணி நேரம் பதட்டம் நிலவியது. காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். பின்னர் ஒடையில் சிக்கிய காவல் வாகனத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்டனர். அதனை தொடர்ந்து ரெக்கவரி வாகனம் மூலம் கார், இரு சக்கர வாகனம் மற்றும் காவல் வாகனம் ஆகியவற்றை திருப்பாலைக்குடி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிந்து திருப்பாலைக்குடி போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu