இராமநாதபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற மரநாய் வாகனம் மோதி உயிரிழப்பு
பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் காவல் சோதனைச்சாவடி அருகே சுமாா் இரண்டரை அடி நீளமுள்ள மர நாய் தலை நசுங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தது.
இராமநாதபுரம் அருகே சாலையை கடக்க முயன்ற அரிய வகை மரநாய் வாகனம் மோதி உயிரிழந்தது.
இராமநாதபுரம் நகா், ஊரக பகுதிகளில் மிக அரிய வகை உயிரினமான மரநாய்கள், குறிப்பாக பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதி நகா் பகுதியில் நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்களால் கூறப்படுகிறது. இந்நிலையில், பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியில் காவல் சோதனைச்சாவடி அருகே சுமாா் இரண்டரை அடி நீளமுள்ள மர நாய் தலை நசுங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தது.
தகவல் அறிந்து அங்கு வந்த, இராமநாதபுரம் உதவி வன பாதுகாவலா் கணேசலிங்கம் தலைமையில் வனவா்கள் மரநாயின் சடலத்தை மீட்டனா். சாலையை கடக்க முயன்றபோது வாகனம் மோதி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. உயிரிழந்த பெண் மரநாய்க்கு சுமாா் 2 வயதிருக்கலாம் என வன அலுவலா்களால் கூறப்படுகிறது, இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் மரநாய் அப்பகுதியில் புதைக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu