திருவாடானை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது; லாரி, ஜேசிபி பறிமுதல்

திருவாடானை அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது; லாரி, ஜேசிபி பறிமுதல்
X

திருவாடானை கடம்பூர் கிராமத்தில் மணல் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரி, ஜேசிபி.

திருவாடானை அருகே அதிகாலையில் தொடர் மணல் திருட்டில் ஈடுபட்ட வந்த டிப்பர் லாரி, ஜேசிபி பறிமுதல். 2 பேர் கைது.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை கடம்பூர் கிராமத்தில் அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை தொடர் மணல் திருட்டு நடைபெறுவதாக திருவாடானை காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கடம்பூர்-விருச்சுழி ஆற்று மணல் படுகையில் காத்திருந்த காவல்துறையினர், அதிகாலை 2.30 மணியளவில் வழக்கம் போல் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்த டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி ஆகிய கனரக வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

டிப்பர் லாரி ஓட்டுநர் மேல்பணையூர் சேர்ந்த கோபால், ஜேசிபி ஓட்டுநர் வரவணியை சேர்ந்த தர்மராஜ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
ai based agriculture in india