கண்மாய் வழியாக சிக்கிய 15 கிலோ எடை கொண்ட மீன்
15 கிலோ எடையுள்ள மீனை பிடித்த இளைஞர்கள்
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. கடந்த வருடம் மழையினால் கண்மாயில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல கண்மாய்களில் மீன் வளர்க்கப்பட்டது.
வளர்த்த மீன்களை கனமழையின் காரணமாக ஏலம் விடாத நிலையில், தற்பொழுது இந்த பகுதிகளில் அதிக மழை பெய்ததின் காரணமாக அனைத்து கண்மாய்களும் நிரம்பி தண்ணீர் கரைபுரண்டு வெளியேறுகிறது. அப்படி ஆதியூர் கண்மாயில் தண்ணீர் வெளியேற்றப்படும் இடத்தில் இளைஞர்கள் ஆர்வமுடன் சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
அப்போது திருவெற்றியூர் கிராமத்தை சேர்ந்த நவநீதன், அஜித், தண்டபாணி இவர்கள் மீன்பிடித்த பகுதியில் 15 கிலோ எடை கொண்ட பெரிய மீன் தென்பட்டது. உடன் சமயோசிதமாக செயல்பட்டு கம்பால் அடித்து மூவரும் அந்த பெரிய மீனை தப்பிக்க விடாமல் பிடித்தனர். கண்மாய் பகுதியில் இவ்வளவு பெரிய மீன் வேறு எங்குமே கிடையாது. கடலில் தான் இதுபோன்ற பெரிய மீன்களை காண முடிந்த நிலையில் கண்மாயில் இவ்வளவு பெரிய மீனை பார்த்த பொதுமக்கள், அதிசயத்து பார்த்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu