/* */

திருவாடானை அருகே 1.26 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது

திருவாடானை அருகே ரேஷன் அரிசி கடத்திய சிறுவன் உட்பட 3 பேர் கைது. மினி லாரி மற்றும் 1.26 டன் ரேசன் அரிசி பறிமுதல்.

HIGHLIGHTS

திருவாடானை அருகே 1.26 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: 3 பேர் கைது
X

திருவாடானை அருகே ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்ட கருண்குமார், பப்லு.

திருவாடானை அருகே ரேஷன் அரிசி கடத்திய சிறுவன் உட்பட 3 பேர் கைது. மினி லாரி மற்றும் 1.26 டன் ரேசன் அரிசி பறிமுதல்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வருவாய் அதிகாரிகள் இரவு மணல் திருட்டை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டு பணி முடிந்து அதிகாலை பாரதி நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு திரும்பியபோது அங்கு நின்றிருந்த மினி லாரி ஒன்று அவரைக் கண்டதும் பின்னோக்கி சென்று தப்ப முயன்றது. இதனை சுதாரித்துக் கொண்ட வட்டாட்சியர் மற்றும் கிராம உதவியாளர்கள் மினி லாரியை மடக்கி பிடித்து சோதனையிட்டதில் லாரியில் 28 மூடைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து லாரி ஓட்டி வந்த காரைக்குடியைச் சேர்ந்த சிறுவன் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கருண்குமார், பப்லு ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சஞ்சய் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கு கொண்டு செல்ல வீடு வீடாக மொத்தமாக வாங்கி சேர்த்து கடத்திக் கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து மினி லாரியும் 1760 கிலோ கொண்ட 1.26 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த வட்டாட்சியர் செந்தில்முருகன் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 2 April 2022 3:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா