சிகிரெட்டை அணைக்காததால் எரிந்த வைக்கோல் படப்பு

சிகிரெட்டை அணைக்காததால் எரிந்த வைக்கோல் படப்பு
X
திருவாடானை அருகே வழிப்போக்கர் அலட்சியத்தால் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்து சேதம்.

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பாண்டுகுடி வடக்கு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் சந்திரசேகரன் (54). இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பு வலுது அம்மன் கோயில் ரோடு அருகே உள்ளது. இதில் அவ்வழியாக சென்றவர்கள் சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் வைக்கோல் படப்பில் வீசியதில் தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சந்திரசேகரனுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த திருவாடானை நிலைய அலுவலர் செங்கோல்ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ எரிந்த வைக்கோல் படப்பின் மதிப்பு ரூ.25000 ஆகும்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!