வாகன சோதனை- தேர்தல் அதிகாரி நேரில் ஆய்வு

வாகன சோதனை- தேர்தல் அதிகாரி நேரில் ஆய்வு
X

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் வாகன சோதனையை தேர்தல் செலவின பார்வை அதிகாரி நேரில் ஆய்வு செய்தார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் உரிய ஆவணங்களின்றி பணம் எடுத்து வரப்படுகிறதா? என்பதை கண்காணிக்க தமிழகம் முழுவதும் வாகனச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இதில் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி காவல் சோதனைச் சாவடியில் தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு நடுவர் விஜயகுமார் தலைமையில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு அதனை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு தேர்தல் செலவின பார்வை அதிகாரி சவ்ரவ் துதே நேரில் ஆய்வு நடத்தினார்.

Tags

Next Story
ai in future agriculture