சிவராத்திரி விழாவிற்கு வந்தவர் கண்மாயில் மூழ்கி பலி

சிவராத்திரி விழாவிற்கு வந்தவர் கண்மாயில் மூழ்கி பலி
X

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் சிவராத்திரி திருவிழாவிற்கு வந்தவர் கண்மாயில் மூழ்கி பலியானார்.

திருவாடானை தாலுகா கடம்பாகுடி கிராமத்தைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரது மகன் குமார், இவர் தூத்துக்குடி பகுதியில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு சிவராத்திரியை முன்னிட்டு கடம்பாக்குடி கண்மாய்க்குள் உள்ள அய்யனார் கோவிலுக்கு சாமி கும்பிட கண்மாய் நீரில் நீந்தி செல்லும் போது கண்மாயில் இருந்த தாமரை கொடிகள் சிக்கியதில் மூச்சு திணறி பலியானார்.

இது குறித்து அறிந்ததும் திருவாடானை தீயணைப்பு மீட்பு படையினர் 2 மணி நேரத்துக்கும் மேலாக தேடி இறந்தவர் உடலை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குமாருக்கு திருமணமாகி ஒரு சில மாதங்களே ஆன நிலையில் நீரில் மூழ்கி இறந்தது உறவினர்களடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
ai as the future