வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல்அலுவலர் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல்அலுவலர் ஆய்வு
X

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021 அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2019-ன் போது மொத்தம் 1,369 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1050 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச் சாவடி என்ற வீதம் கூடுதலாக 278 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு மொத்தம் 1,647 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களும் தரைதளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக சக்கர நாற்காலி மற்றும் சாய்வு தளம் இருப்பதை உறுதி செய்திடவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாக ஆய்வு செய்தார். குறிப்பாக தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, உப்பூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்