இலங்கைக்கு படகில் மஞ்சள் கடத்தல்: தூத்துக்குடியை சேர்ந்த 5 பேர் கைது
மண்டபம் தெற்கு கடலில் நேற்று இரவு 10 மணியளவில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து செல்லும் போது 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்தேகப்படும் படி தூத்துக்குடியை சேர்ந்த பாஸ்கர் என்ற சுறா பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான IND TN 10 MO 2497 என்ற எண் கொண்ட நாட்டுப்படகு ஒன்று சந்தேகப்படும் படி கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது.
இதனை பார்த்த கடலோர காவல்படையினர் அருகே சென்று சோதனை செய்ய முயன்ற போது, படகு வேகமாக தப்பிச் சென்று, அனைத்து மூட்டைகளிலும் இருந்த மஞ்சகளை கடலில் கொட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர். படகில் இருந்த 5 பேரையும் விரட்டி பிடித்த கடலோர காவல்படையினர் விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடியை சேர்ந்த டிரைவர் நிர்மல் ராஜ், டோமினிக் சாவியோ, இன்பன்ட் விக்டர், செல்வகுமார், கீதன் என்பது தெரியவந்தது. 5 பேரையும் நாட்டுப்படகுடன் மண்டபம் இந்திய கடலோர காவல்படை தளம் தெற்கு பகுதிக்கு கொண்டு வந்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu