வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய அஞ்சல் தலை வெளியீடு

வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய அஞ்சல் தலை வெளியீடு
X
இராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய அஞ்சல் தலையை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அஞ்சல் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் 'எனது அஞ்சல்தலை திட்டத்தின் கீழ் '100% வாக்களிப்போம்" என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய வாக்காளர் விழிப்புணர்வு அஞ்சல் தலையினை வெளியிட்டார்.

சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021க்கான வாக்குப்பதிவு 06.04.2021 அன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் கிராமிய கலைநிகழ்ச்சிகள், பாராசூட் சாகசம், பேரணி, மணல் சிற்பம் உள்ளிட்ட பல்வேறு வகையில் வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 'கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்றல்;, முதன்முறை வாக்காளர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தரப்பு வாக்காளர்களையும் தேர்தல் நடவடிக்கைகளில் ஊக்குவித்தல், 100 சதவித வாக்குப்பதிவு, நேர்மையாக வாக்களித்தல்" உள்ளிட்ட நோக்கங்களை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அஞ்சல் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் 'எனது அஞ்சல்தலை- திட்டத்தின் கீழ் மாவட்ட தேர்தல் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், 100 % வாக்களிப்போம்" என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய அஞ்சல் தலையினை வெளியிட பிரதீப்குமார், பெற்றுக் கொண்டார். மேலும், அரசுத்துறைகளில் அனுப்பப்படும் அரசு கடிதங்களில் இந்த அஞ்சல் தலையை பயன்படுத்தி விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story
ai marketing future