வைகையில் திறந்து விடப்பட்ட 11ஆயிரம் கனஅடி உபரிநீர் ராமநாதபுரம் வந்தது

வைகையில் திறந்து விடப்பட்ட 11ஆயிரம் கனஅடி உபரிநீர் ராமநாதபுரம் வந்தது
X

வைகை ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட 11 ஆயிரம் கன அடி உபரிநீர் இராமநாதபுரத்தை வந்தடைந்தது. 

வைகை ஆற்றில் திறந்து விடப்பட்ட 11ஆயிரம் கனஅடி உபரிநீர், இராமநாதபுரம் வந்தடைந்தது; 3000 கனஅடி கடலுக்கு திறந்துவிடப்பட்டது.

வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக, வைகை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் உபரிநீர் முழுமையாக திறக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட தண்ணீர், நேற்று இரவு இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் மதகு வழியாக பெரிய கண்மாய்க்கு வந்தடைந்தது.

இவ்வாறு வந்த தண்ணீரில், 9 ஆயிரம் கன அடி தண்ணீரை பார்த்திபனூரில் இருந்து இராமநாதபுரம் வரை 250-க்கும் மேற்பட்ட கண்மாய்களில் பொதுப்பணித்துறையினர் தேக்கியுள்ளனர். அதுபோக, மீதமுள்ள 3 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இராமநாதபுரம் பெரிய கண்மாயில் இருந்து ஆர்.காவனூர் வழியாக ஆற்றங்கரை சென்று அங்கு கடலில் கலக்கிறது. வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர், முழுமையாக தேக்க முடியாமல் கடலில் கலந்து வீணாகின்றது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்