கீழக்கரையில் கட்டி முடிக்காத ரயில்வே மேம்பாலம்: விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

கீழக்கரையில் கட்டி முடிக்காத ரயில்வே மேம்பாலம்: விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
X

இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமரையா கோவில் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்வண்டி மேம்பாலத்தை கட்டி முடிக்காமல் காலம் தாழ்த்தி வரும் நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் கீழக்கரையை இணைக்கும் தொடர்வண்டி மேம்பாலத்தை கட்டி முடிக்காமல் காலம் தாழ்த்தி வரும் நெடுஞ்சாலைத் துறையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

இராமநாதபுரம் நகர் பகுதியில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் சந்திப்பு மற்றும் கீழக்கரை ஏர்வாடி வழியாக தூத்துக்குடி செல்லும் கடற்கரை சாலையின் இடையே ரயில்வே தண்டவாளம் உள்ளது. அப்பகுதியில் ரயில்கள் வரும் நேரங்களில் நீண்ட நேரம் ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் நகர் பகுதியில் இருந்து வெளியே செல்லக்கூடிய பேருந்துகள், பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்கும் நிலையில், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே மேம்பாலம் கட்ட தனியார் ஒப்பந்ததாரர் மூலம் மேம்பாலம் கட்ட ஒப்பந்தம் செய்யப்பட்டு மேம்பாலம் கட்ட ஆரம்பித்தனர். 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், வருடக்கணக்கில் பாலம் கட்டி முடிக்காமல் காலம் தாழ்த்தி வருவதால், அப்பகுதியில் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமமும், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையைக் கருத்தில் கொண்டு கீழக்கரை இராமநாதபுரத்தை இணைக்கும் தொடர்வண்டி மேம்பாலத்தை உடனடியாக கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறையினரைக் கண்டித்து ஆதி தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தலைமையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் யாசின் முன்னிலையில், இராமநாதபுரம், இராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமரையா கோவில் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் மதுரை வீரன், வீரகுல தமிழர் படை கீழை பிரபாகரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!