/* */

68 நாட்களுக்குப்பின் பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில் சேவை தொடக்கம்

68 நாட்களுக்கு பிறகு பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

68 நாட்களுக்குப்பின் பாம்பன் தூக்கு பாலத்தில் ரயில் சேவை தொடக்கம்
X

பாம்பன் தூக்கு பாலம்.

இராமேஸ்வரம் தீவை தமிழகத்துடன் இணைப்பதில் பாம்பன் தூக்கு பாலம் முக்கிய பங்காற்றி வருகிறது. பாம்பன் தூக்கு பாலம் வழியாக தினசரி ரயில்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொது மக்கள் என பல்லாயிரக் கணக்கானோர் இராமேஸ்வரம் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 28ந் தேதி காலை சென்னையில் இருந்து இராமேஸ்வரம் நோக்கி வந்த சேது விரைவு இரயில் பாம்பன் பாலத்தை கடந்து செல்லும் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதிர்வுகள் ஏற்பட்டது. இதனையடுத்து பராமரிப்பு பணிக்காக அன்றிலிருந்து பாம்பன் தூக்கு பாலம் வழியாக ரயில் செல்ல தெற்கு ரயில்வே அனுமதியை ரத்து செய்தது.

இதையடுத்து ரயில்வே ஊழியர்கள், பாம்பன் பாலம் பொறியாளர்கள் மற்றும் ஐஐடி குழுவினர் என அனைவரும் தொடர்ந்து தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து நடந்துவந்த மராமத்து பணியினை பயணிகள் இல்லாமல் ரயில்களை இயக்கி ஆறு கட்டங்களாக ரயில்வே உயர் அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர்.

பல்வேறு சோதனைக்குப்பின், இன்று மதியம் சுமார் 3 மணியளவில் நடத்தப்பட்ட இறுதி கட்ட சோதனை முடிவில் பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சீர்செய்யப்பட்டு அதிர்வுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதனையடுத்து 68 நாட்களுக்கு பின் இன்று முதல் பாம்பன் தூக்கு பாலம் வழியாக ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்தது.

இதனைத்தொடர்ந்து இன்று இரவு ராமேஸ்வரம் நோக்கி வரும் புவனேஸ்வர் விரைவு ரயில் பாம்பன் பாலம் வழியாக இராமேஸ்வரத்திற்கு நேரடியாக வந்து சேருகிறது. அதேபோல் இன்று மாலை சென்னையில் இருந்து புறப்படும் சேது ரயில் நாளைக்கு அதிகாலை பாம்பன் தூக்கு பாலம் வழியாக இராமேஸ்வரம் ரயில் நிலையத்தை வந்து சேரும். அதனை தொடர்ந்து இராமேஸ்வரத்தில் இருந்து ரயில்கள் அனைத்தும் பாம்பன் ரயில் பாலம் வழியாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On: 6 Sep 2021 12:06 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...