நெடுந்தீவு--மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது

நெடுந்தீவு--மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது
X
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் 1 விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

ராமதாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிச்சீட்டை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பெற்றுக்கொண்டு நேற்று மாலை 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் 1 விசைப்படகையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.

இதையடுத்து இவர்கள் விசாரணைக்காக மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். இலங்கை கடற்படையின் இந்த தொடர் கைது நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Next Story
ai solutions for small business