ராமேஸ்வரம் மீனவர்களை டிச.31 வரை சிறை வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம் மீனவர்களை டிச.31 வரை சிறை வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு
X
நேற்று இரவு சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டதால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்

நேற்று இரவு சிறைபிடிக்கப்பட்ட இராமேஸ்வரம் மீனவர்களுக்கு 31ம் தேதி வரை சிறைக்காவல். இலங்கை நீதிமன்றம் உத்தரவு.

நேற்று நள்ளிரவு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 43 மீனவர்களை இன்று ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்களை வரும் 31-ஆம் தேதி வரை சிறைக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலறிந்த தமிழக மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இப்பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொலை பேசியில் தொடர்பு கொணே்டு சிறையிலிருக்கும் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

Tags

Next Story