இராமேஸ்வரத்தில் தொடர் திருட்டு வாலிபர் கைது: 10 பவுன் நகை பறிமுதல்
இராமேஸ்வரத்தில் தொடர் திருட்டில் ஈடுப்பட்டு வந்த சரவணன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடம் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக தொடர்ந்து நடந்த திருட்டு தொடர்பாக வழக்குகள் பதிந்து இராமேஸ்வரம் நகர் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையில் தனிப்படையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படையினர் சந்தேகத்தின்பேரில் இராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெரு, முஸ்லிம் தெரு அசோகன் மகன் சரவணன் (23) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அவரது வாக்குமூலம் படி அவரது கைவிரல் ரேகை எடுக்கப்பட்டு, விரல் ரேகை பிரிவில் பகுப்பாய்வு செய்யப்பட்டதில், திருட்டு சம்பவங்களில் சரவணன் ஈடுபட்டது தெரிய வந்தது. பகல் நேரங்களில் பூட்டிருக்கும் வீடுகளில் திருடியது தெரிய வருகிறது. இராமேஸ்வரம் நகர், தங்கச்சிமடம் காவல் நிலையங்களில் பதிவான 4 வழக்குகளில் திருடுபோன தங்க நெக்லஸ், தங்க பெண்டன் டாலர் செயின், தங்க கை செயின், சிறிய தங்க செயின், தங்க தோடு 2 ஜோடி என பத்தே கால் பவுன் நகை, வெள்ளி கொலுசு இரண்டு ஜோடி, லேப்டாப், ரூ.19,000 ஆகியன சரவணனிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
இத்தொடர் திருட்டு வழக்குகளில் தீவிரமாக துப்பு துலக்கி குற்றவாளியை கண்டுபிடித்த இராமேஸ்வரம் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கண்ணதாசன் தலைமையில் தனிப்படையினர், கைவிரல் ரேகையை விரைவாக பகுப்பாய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க உதவிய மாவட்ட விரல் ரேகை பிரிவினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் வெகுவாக பாராட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu