இராமநாதபுரத்தில் ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை

இராமநாதபுரத்தில் ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை
X

மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத்,  தேசியக்கொடி ஏற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இராமநாதபுரத்தில் ஆட்சியர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செய்தார்.

இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில், இன்று குடியரசு தின விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் தேசியக்கொடி ஏற்றி, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.130 பயனாளிகளுக்கு ரூ.46.45 லட்சம் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

காவல்துறையினர் 59 பேருக்கு தமிழக முதல்வர் பதக்கம், அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் 159 பேருக்கு நற்சான்றிதழ், சிறப்பாக பணியாற்றிய காவலர் 27 பேருக்கு நற்சான்று பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

எஸ்பி கார்த்திக், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார், வன பாதுகாவலர் ஜக்தீஸ் பவான் சுதாகர் உள்பட பலர் பங்கேற்றனர். ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ தேசியக்கொடி ஏற்றினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!