கள்ளத் தோணியில் அகதிகள் 3 பேரை இலங்கைக்கு அனுப்பி வைத்த 4 பேர் கைது
தூத்துக்குடி அகதிகள் முகாமில் இருந்த மூன்று பேர் இலங்கைக்கு கள்ள தோனி பாம்பன் வழியாக செல்ல இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கியூ பிரிவு போலீசார் பாம்பன் பகுதியில் ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அக்காள் மடத்தைச் சேர்ந்த சிவாஸ் எபிராஜ், தீசிங்கு ராஜன், செமன் பெரோசியாஸ், ஈசா ஆகிய 4 பேரும், தூத்துக்குடி அகதிகள் முகாமில் இருந்த மூன்று பேரை, இலங்கை செல்வதற்காக இராமேஸ்வரம் வரவழைக்கப்பட்டு, நேற்று பாம்பன் அடுத்துள்ள முதல்முனை கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கள்ள தோனி மூலம் அனுப்பி வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து 4 பேரையும் இராமநாதபுரம் கியூ பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார், இங்கிருந்து அனுப்பபட்ட இலங்கை அகதி விவரம் குறித்தும், எவ்வளவு பணம் பெற்றுக்கொண்டு அனுப்பினார்கள், இவர்களுக்கும் இலங்கையை சேர்ந்தவர்களுக்கும் உள்ள தொடர்புகள் என்ன என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu