இராமநாதபுரத்தில் சாதி சான்றிதழ் கேட்டு இருளர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு

இராமநாதபுரத்தில் சாதி சான்றிதழ் கேட்டு இருளர் இன மக்கள் ஆட்சியரிடம் மனு
X

மேலக்கொடுமலூர் அருகே உள்ள கணேசபுரம் கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் சாதி சான்றிதழ் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

குழந்தைகள் படிப்பதற்காக இருளர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி இருளர் சமுதாயத்தினர் இராமநாதபுரம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

குழந்தைகள் படிப்பதற்காக இருளர் சாதி சான்றிதழ் வழங்கக்கோரி இருளர் சமுதாயத்தினர் இராமநாதபுரம் ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கொடுமலூர் அருகே உள்ள கணேசபுரம் கிராமத்தில் இருளர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு இருளர் என்று சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஏராளமான இருளர் சமுதாயத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

மேலும் 12 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர்களுக்கு வீட்டு மனை பட்டா, சாலை வசதி, தெரு விளக்கு வசதி, மயான வசதி போன்றவற்றை செய்து தர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!