தேசிய அளவிலான சிலம்பம் போட்டி: இராமநாதபுரம் மாணவர்கள் தங்கம் வென்று அசத்தல்

தேசிய அளவிலான சிலம்பம் போட்டி: இராமநாதபுரம் மாணவர்கள் தங்கம் வென்று அசத்தல்
X

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கம் வென்று அசத்திய இராமநாதபுரம் மாணவர்கள்.

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் இராமநாதபுரம் மாணவர்கள் தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் ஸ்வர்ண பாரதி ஸ்டேடியத்தில் வோல்டு யூனியன் சிலம்பம் பெடரேஷன் அமைப்பு மூலம் கடந்த 21,22 ஆகிய இரண்டு நாட்கள் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.

இராமநாதபுரத்தில் இருந்து நிக்கோலஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகடாமி மாணவர்கள் கனிஷ்கா, கருணேஸ் கார்த்திகேயன், பிரசன்னா, சபரி வாசன், ஜெய ஶ்ரீ, கணேஷ் குமார், கார்த்திக் குமார், முகேஷ் ஆகிய 8 நபர்கள் கலந்து கொண்டனர். சப் ஜுனியர் பெண்கள் பிரிவில் மாணவி கனிஷ்கா, ஒற்றை கம்பு பிரிவில் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார். சப் ஜுனியர் ஆண்கள் பிரிவில் மாணவன் கருணேஸ் கார்த்திகேயன் ஒற்றை கம்பு பிரிவில் முதல் பரிசு தங்கம் வென்றார். மேலும் சுருள் வாள் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

சப் ஜுனியர் பிரிவில் மாணவன் சபரி வாசன் ஒற்றை கம்பில் வெள்ளி பதக்கம் மற்றும் சுருள் வாள் பிரிவில் வெண்கலப் பதக்கமும், வேல்கம்பு பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றார். சப் ஜுனியர் பிரிவில் மாணவன் பிரசன்னா ஒற்றை கம்பில் வெண்கலப் பதக்கம், சுருள் வாள் பிரிவில் வெள்ளி பதக்கம் மற்றும் வேல் கம்பு பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். ஜுனியர் பிரிவில் மாணவன் கார்த்திக் குமார் வேல்கம்பு பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார். இதில் ஆந்திரா, கர்நாடக, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா என பல மாநிலங்களில் இருந்து சுமார் 600 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் சர்வதேச அளவில் நடைபெற இருக்கும் போட்டிகளில் பங்கு பெறுவதற்கு பயிற்சிகள் பெற உள்ளனர். இவர்களின் வெற்றிக்கு சிறப்பாக பயிற்சி அளித்த சிலம்பம் பயிற்சியாளர் மேத்யு இம்மானுவேலுக்கு வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். தமிழரின் பாரம்பரியம் மிக்க வீர விளையாட்டுகள் மீண்டும் உலக அளவில் எடுத்து செல்வதற்கு இவர்கள் தொடர்ந்து பயிற்சி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story