முல்லை பெரியாறு அணை விவகாரம்: இராமநாதபுரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரத்தில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட கேரள முதலமைச்சரை அழைத்ததை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
ராமநாதபுரத்தில் அதிமுக சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது முல்லைப் பெரியாறு அணையை கேரள முதலமைச்சரை கொண்டு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு அழைத்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழக மக்களை திமுகவும், தமிழக அரசும் மக்களை அடிமைகள் ஆகிவிட்டது என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழக மக்களின் வாழ்வாதாரமாக உள்ள 10 லட்சம் மக்களின் நலன் கருதி பெரியாறு முல்லைப் பெரியாறு அணையை நம்பியுள்ள விவசாயிகளின் நலன் கருதியும் அணையின் தண்ணீரின் அளவு 142 அடியாக உயர்வதற்கு மிகவும் பாடுபட்டவர் இன்று திமுக அரசு தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டதாக கூறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதிமுக தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ராஜ் சத்தியன் முன்னிலையில் கோஷங்கள் முழங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் ராமநாதபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் எம் ஏ எம் முனியசாமி முன்னாள் எம்பி அன்வர்ராஜா திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் கருப்பையா, ஆர்எஸ் மங்கலம் ஒன்றிய செயலாளர் நந்திவர்மன் முன்னாள் எம்எல்ஏ சதன் பிரபாகரன் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சாமிநாதன் முன்னாள் அதிமுக நகர் தலைவர் கேசி வரதன் அதிமுக நகர செயலாளர் அங்குசாமி பட்டணம்காத்தான் ஊராட்சித் தலைவர், டாக்டர் சித்ரா மருது வாலாந்தரவை ஜெயபால் கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஏஜி சிவக்குமார் நாட்டுக்கோட்டை விஜய கார்த்திகேயன் தெற்கு காட்டூர் ரமேஷ் வழுதூர் விஜிபி ஜெகன் ஒன்றிய துணைச் செயலாளர் சண்முகவேலு பாரதி நகர் பாரதி நகர் ஜே எஸ் வழக்கறிஞர் கே என் கருணாகரன் ராமமூர்த்தி நாகாச்சி கல்யாணராமன் ஓம் சக்தி நகர் சிபி கணேசன் பட்டணம்காத்தான் ஊராட்சி துணைத் தலைவர் வினோத் இளைஞர் பாசறை செயலாளர் சுந்தர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu