மண்டபத்தில் தாய், மகள் உடல் எரிந்த நிலையில் மீட்பு: போலீசார் விசாரணை

மண்டபத்தில் தாய், மகள் உடல் எரிந்த நிலையில் மீட்பு: போலீசார் விசாரணை
X

மண்டபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த காளியம்மாள், மணிமேகலை.

இராமேஸ்வரம் அடுத்த மண்டபத்தில் தாய், மகள் உடல் எரிந்த நிலையில் மீட்பு. கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை.

இராமேஸ்வரம் அடுத்த மண்டபத்தில் தாய், மகள் உடல் எரிந்த நிலையில் மீட்பு, கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் கண்ணன். ரயில்வே சுகாதார பணியாளரான இவர், 25 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனையடுத்த அவரது மனைவி காளியம்மாளுக்கு அந்த வேலை வழங்கப்பட்டு பார்த்து வருகிறார். இவரது மகள்கள் சண்முகபிரியா 38, மணிமேகலை,34. பி காம் பட்டதாரி.

திருமணமான சண்முகபிரியா மதுரையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மண்டபம் ரயில்வே சுகாதார நிலையம் பின்புறமுள்ள ரயில்வே குடியிருப்பில் காளியம்மாள், மணிமேகலையுடன் வசித்து வந்தார். மணிமேகலைக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில், இன்று காலை ரேஷன் பொருள் வாங்கிச் செல்ல மதுரையில் இருந்து சண்முகப்பிரியா பஸ்சில் மண்டபம் வந்தார். வரும் வழியில், காளியம்மாளுக்கு தகவல் தெரிவிக்க சண்முகப்பிரியா செல்போனில் பல முறை தொடர்பு கொண்டார்.

எவ்வித பதிலும் இல்லாததால், பஸ்ஸில் இருந்து மண்டபத்தில் இறங்கிய சண்முகபிரியா, தாயார் வீட்டிற்கு சென்றார். அங்கு வீட்டின் முன்புற வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது கண்டு அச்சமடைந்தார். வீட்டின் சிறு சுவர் மீது ஏறி சென்ற சண்முகபிரியா வீட்டின் பின்புற வாசல் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றார். அங்கே, காளியம்மாள், மணிமேகலை ஆகியோரது உடல்கள் சிறிய இடைவெளியில் முற்றிலும் கருகிய நிலையில் கிடந்தது கண்டு அலறினார்.

தகவலின்பேரில், ராமேஸ்வரம் ஏஎஸ்பி தீபக் ஸ்வாட்ச், மண்டபம் இன்ஸ்பெக்டர் ஜீவரத்தினம் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். காளியம்மாள், மணிமேகலை ஆகியோரின் எரிந்த உடல் உறுப்புகளை பரிசோதனைக்கு தடயவியல் பிரிவு போலீசார் சேகரித்தனர். சுற்றுப்புறத்தில் யாரும் வசிக்காத நிலையில், வீடு பூட்டப்பட்டு தாய், மகள் எரிந்து கிடந்த சம்பவத்தால் மண்டபம் பகுதியில் பரபரப்பு நிலவியது. இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற இருந்த நிலையில் காளியம்மாள், அவரது மகள் எரிந்த கிடந்த சம்பவம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி