தமிழக கடலோர காவல் படைக்கு விரைவில் அதிவிரைவு படகுகள் - ஏடிஜிபி தகவல்

தமிழக கடலோர காவல் படைக்கு  விரைவில் அதிவிரைவு படகுகள் - ஏடிஜிபி தகவல்
X

ஓலைக்குடா கடற்கரை பகுதியில் மரக்கன்றுகளை நட்டுவைத் கடலோர காவல் படை ஏடிஜிபி சந்தீப் மிட்டல்.

தமிழக கடலோர காவல் படைக்கு அதிவிரைவு படகுகள் விரைவில் வர உள்ளது என ஏடிஜிபி தெரிவித்தார்.

ராமேஸ்வரம் அடுத்துள்ள ஓலைக்குடா கடற்கரை பகுதியில் பத்தாயிரம் பனை மர விதைகளை நடும் விழாவினை தமிழக கடலோர காவல் படை ஏடிஜிபி சந்தீப் மிட்டல் மரக்கன்றுகளை நட்டு துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஏடிஜிபி சந்தீப் மிட்டல், தமிழக கடலோர காவல் படைக்கு அதிநவீன ரோந்து படகுகள் இருந்தாலும் மீனவர்கள் தான் எங்களுக்கு காதும் கண்ணும். அவர்களின் உதவி இல்லாமல் வேலை செய்ய முடியாது.

இதைப்போல் அவர்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் 1093 என்ற நம்பரை அழைத்தால் உதவி செய்ய காத்திருக்கிறோம் என தெரிவித்தார்.

இதனையடுத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என்றும், மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கண்காணிப்பதற்காக மண்டபம் பகுதிக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அதிவிரைவு படைகள் வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!