இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கை அரசை கண்டித்து இன்று தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 12 இராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய கோரியும், இலங்கை கடற்படையால் அரசுடைமையாக்கப்பட்டு ஏலம் விடப்பட்ட படகுகளை விறகுக்காக விற்பனை செய்வதை கண்டித்து இன்று தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மீனவர்கள் வழக்கு வரும் 12ந் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், அதேபோல் இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பி அனுப்பப்படாத மண்டபம் மீனவர்கள் 4 பேரையும் உடனடியாக தாயகம்; திருப்பி அனுப்பி வலியுறுத்தியும், 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை சிறைபிடிக்கப்பட்டு இலங்கை மீன்பிடித் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீன்பிடி விசைப் படகுகளை உடனடியாக மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் மீனவர்கள் மற்றும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை கடற்படையால் அரசுடமையாக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான மீன்பிடி விசைப் படகுகளை தற்போது இலங்கையில் ஏற்பட்டள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றத்தால் அந்தப் படகுகளில் இருந்து எடுக்கப்பட்ட மரப்பலகைகளை விறகுக்காக விற்பனை செய்வது வேதனை அளிப்பதாகவும், கடந்த 4 ஆண்டுகளாக இலங்கை அரசால் தடுத்து வைக்கபட்டுள்ள படகுகளை உடனடியாக தமிழக மீனவர்களிடம் ஒப்படைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu