கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதிவேண்டி மீனவர்கள் ஆட்சியரிடம் மனு
கட்சத்தீவு திருவிழா (பைல் படம்)
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதி வேண்டி மீனவர்கள் ஆட்சியரிடம் மனு.
வரும் மார்ச் மாதம் 11,12 தேதிகளில் நடைபெற இருக்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்பதற்கு அனுமதி வழங்கவேண்டும் என அனைத்து விசைப்படகு மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவாத்திடம் நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
ஆட்சியரிடம் அளித்த மனுவில், கச்சதீவு புனித அந்தோணியார் ஆலயத்திருவிழா பாரம்பரியமாக வருடம் தோறும் மார்ச் மாதம் இந்திய, இலங்கை இருநாட்டு மீனவர்களும், இரு நாட்டு அரசு அதிகாரிகளும் இணைந்து 8.000-க்கு மேற்பட்ட மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா பெருந்தோற்றுக் காரணமாக திருவிழா நடைபெறவில்லை.தற்போது இந்த ஆண்டு மார்ச் மாதம் 11.03.2022,12.03.2022 ஆகிய நாட்களில் இலங்கை மக்கள் மட்டும் 500 நபர்கள் கலந்து கொண்டு திருவிழா நடத்துவது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த பாரம்பரிய திருவிழாவில் தமிழக மீனவ மக்களின் பாரம்பரிய உரிமைகள் விட்டு போகாமல் இருக்க நடைபெற இருக்கின்ற கச்சதீவு புனித அந்தோணியார் திருவிழாவில் குறைந்தது 200 பேராவது தமிழக மீனவ மக்கள் கலந்து கொள்ள அனுமதி பெற்றுத்தர வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu