விவேக் மறைந்தாலும் மரங்கள் அவர் பெயரைச் சொல்லும்
நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை மரணம் அடைந்தார். தமிழக திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்தாலும் தனது வாழ்வில் கதாநாயகனாக வாழ்ந்தவர் விவேக். சமூகம் மீதும், இயற்கை மீதும் அதிகம் அக்கரை கொண்ட நடிகர் விவேக் மறைந்த முன்னால் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மீது கொண்ட அன்பால் அவரின் கனவை நினைவாக்கும் வகையில் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.
குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக மாவட்ட ஆட்சியர் அலுலகம், டி.ஐ.ஜி முகாம் அலுவலகம், இராஜா மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகளை நட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு இராமேஸ்வரம் வந்த நடிகர் விவேக் இராமநாதபுரம் அரண்மனை அருகில் உள்ள இராஜா மேல் நிலைப் பள்ளியில் 3 மரங்களை நட்டுள்ளார். தற்போது அந்த மரங்கள் அவர் பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்து அங்கு படிக்கும் மாணவர்களுக்கு நிழல் தந்து கொண்டிருக்கின்றது. இப்படி மண்ணுக்குள் பல்வேறு விதைகளை விதைத்து விட்டு இன்று அமைதியாய் அந்த மண்ணுக்குள் செல்கிறார் சின்ன கலைவானர். அவர் மறைந்தாலும் அவர் வைத்த மரங்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu