இராமேஸ்வரம் பகுதியில் டேங்கர் லாரி மூலம் நிலவேம்பு கசாயம் வினியோகம்

இராமேஸ்வரம் பகுதியில் டேங்கர் லாரி மூலம் நிலவேம்பு கசாயம் வினியோகம்
X

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் சேவாபாரதி அமைப்பின் சார்பில் டேங்கர் லாரி மூலம் நிலவேம்பு கசாயம் ராமேஸ்வரம் தீவு முழுவதும் வழங்கப்பட்டது.

இராமேஸ்வரம் பகுதியில் டேங்கர் லாரி மூலம் பொதுநநிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது

இராமேஸ்வரம் பகுதியில் டேங்கர் லாரி மூலம் நிலவேம்பு கசாயம் வினியோகம்.

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் சேவாபாரதி அமைப்பின் சார்பில் டேங்கர் லாரி மூலம் நிலவேம்பு கசாயம் ராமேஸ்வரம் தீவு முழுவதும் வழங்கப்பட்டது.

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் வாசல் பகுதியில் 500 லிட்டர் கொள்ளளவு உடைய சிறிய தண்ணீர் டேங்க் முழுவதும் நிலவேம்பு கசாயம் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இராமேஸ்வரம் திருக்கோயில் மேலவாசல் பகுதியில் இருந்து தொடங்கி நிலவேம்பு கசாய வண்டியானது கோவில் நான்கு ரத விதியை சுற்றிலும் வலம் வந்தபடி ரதவீதியில் சாலை வழியாக நடந்து வரும் ஏராளமான பக்தர்களுக்கு நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து வர்த்தகம் தெரு, நடுத்தெரு, திட்டகுடி சந்திப்பு, தேவர் சிலை உள்ளிட்ட இராமேஸ்வரம் தீவு முழுவதும் உள்ள பகுதிகளில் சென்று பொதுமக்கள் இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. வீட்டின் வாசலுக்கு நேரடியாக வந்து கொடுக்கப்பட்ட நிலவேம்பு கசாய ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் ஆர்வத்தோடு வாங்கி பருகினர்.

Tags

Next Story
ai and smart homes of future