மண்டபம் பகுதியில் சூறைக்காற்றால் மீன்பிடி படகு சேதம்: ஆட்சியர் ஆய்வு

மண்டபம் பகுதியில் சூறைக்காற்றால் மீன்பிடி படகு சேதம்: ஆட்சியர் ஆய்வு
X

மண்டபம் வடக்கு மீன்பிடி இறங்குதளம் பகுதியில் சூறைக்காற்று காரணமாக சேதமடைந்த மீன்பிடிபடகினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மண்டபம் பகுதிகள் சூறைக்காற்று காரணமாக சேதமடைந்த மீன்பிடி படகினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மண்டபம் வடக்கு மீன்பிடி இறங்குதளம் பகுதிகள் சூறைக்காற்று காரணமாக சேதமடைந்த மீன்பிடிபடகினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. 1.11.2021 முதல் 30.11.2021 வரையில் மட்டும் 384 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக மனித உயிரிழப்பு போன்ற பெரும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் ஒரு சில தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கும் சுழ்நிலை ஏற்பட்டது. அவ்வாறு மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை போர்க்கால அடிப்படையில் அருகே உள்ள நிவாரண மையங்களில் பாதுகாப்பாக தங்கவைத்திட வருவாய்த் துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர்நகர், எருமைதரவை அருகே உள்ள முனைக்காடு, பாம்பன் ஊராட்சிக்கு உட்பட்ட கே.கே.நகர், சாயக்காரத் தெரு ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்கள்.

குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளை தொடர்ந்து விழிப்புடன் மேற்கொள்ளவும், எதிர்வரும் காலங்களில் அப்பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பாதுகாப்பதற்கான நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு உரியநடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் மண்டபம் வடக்குமீன்பிடி இறங்குதளம் பகுதிகள் சூறைக்காற்று காரணமாக சேதமடைந்த மீன்பிடிபடகினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுகளின் போது இராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், வட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன் (இராமநாதபுரம்), மார்ட்டின் (இராமேஸ்வரம்) உட்பட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!